'இரண்டாம் குத்து' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார், அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்திற்கு 'மிஸ்டர் வர்ஜீன்' என பெயரிட்டிருக்கிறார்.

'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். 

இவரது இயக்கத்தில் தயாரான 'இரண்டாம் குத்து' என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாகவும் உயர்ந்தார். 

அடல்ட் ஹாரர் கொமடி படமான இந்தப் படத்தை பற்றிய விமர்சனம் எதிர்மறையாக இருந்த போதிலும், வணிகரீதியாக இந்தப்படம் வெற்றியைப் பெற்றதால், இவர் கதையின் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய இணையப் பக்கத்தில்,

'அடுத்ததாக 'மிஸ்டர் வர்ஜின்' என்ற பெயரில் புதிய படத்தை நடித்து இயக்கவிருக்கிறேன். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியிடும் வகையில் திட்டமிட்டிருக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். 

இதற்கென பிரத்தியேகமாக டைட்டில் டீஸர் ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

'மிஸ்டர் வர்ஜின்' காமமும், கொமடியும் கலந்த காதல் கதை என்பதால் ரசிகர்களிடத்தில் தற்போதே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.