சைவ உணவை மட்டும் கடை பிடிப்பவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது உடல் எடையை குறைப்பதற்காகவும், குறைத்துக் கொண்ட உடல் எடையை பராமரிப்பதற்காகவும் 'வேகன் டயட்' எனப்படும் சைவ உணவு முறையை பின்பற்றுகிறார்கள். 

வேறு சிலர் சைவ உணவுடன் மீன் மற்றும் கடல் உணவுகளை இணைத்து Pescetarian Diet என்ற உணவு முறையை பின்பற்றுகிறார்கள்.

உடல் எடையை பராமரிப்பதற்காக இவர்கள் கடைப்பிடிக்கும் உணவு முறையில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் புரதசத்து இருப்பதில்லை என்றும், இதன் காரணமாகவே இவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைகிறது என்றும், இதன் காரணமாகவே இவர்களுக்கு மற்றவர்களை விட விரைவில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். 

அதிலும் குறிப்பாக இவர்களுக்கு இடுப்பு மற்றும் மூட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். 

எனவே, உடல் எடையை குறைக்கும் உணவு முறையை கடைபிடிக்கும் போது மருத்துவர்களின் ஆலோசனையுடன் எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலான உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்ற என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி, தொகுப்பு அனுஷா.