அட்டனை அண்மித்த தோட்டங்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: Digital Desk 4

23 Nov, 2020 | 10:26 AM
image

அட்டனை அண்மித்த தோட்டப்பகுதிகளில் எடுக்கப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளின் போது அதில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஹட்டன் காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்தார்.

இது குறித்த அவர் தெரிவிக்கையில், 

கொழும்பிலிருந்து சென்ற பலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் வெலிஓயா தோட்டத்தில் மூவருக்கும், ஸ்டெரதன் தோட்டத்தில் ஒருவருக்கும் பிளக்வோட்டர் தோட்டத்தில் மூவருக்கும் அம்பத்தலாவையில் ஒருவருக்கும் கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் அனைவருமே தலைநகரிலிருந்து சென்றவர்களாவர்.  அதேவேளை நாம் இப்போது கலுகல்ல சோதனைச் சாவடிக்கு அருகாமையிலேயே கொழும்பிலிருந்து பஸ்களில் வருகை தருவோருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளை செய்து வருகின்றோம். 

மேலும் இவ்வாறு தலைநகரிலிருந்து வருவோர் பற்றிய தகவல்களை எமக்கு அறியத்தருமாறு பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம். இது பரவல் வீதத்தை கட்டுப்படுத்த உதவும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08