கொழும்பு, தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து (ஐ.டி.எச்) தப்பிக்க முயன்ற கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணிக்கு இச் சம்பவம் நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவர் 22 வயதுடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.