Luxury Lifestyle Awards 2020 நிகழ்வில் Capitol TwinPeaks apartment திட்டத்துக்கு சர்வதேச விருது

23 Nov, 2020 | 02:04 AM
image

ஒக்டோபர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட  Luxury Lifestyle Awards 2020 நிகழ்வின் போது Capitol TwinPeaks apartment திட்டத்துக்காக, Capitol Developers (Sanken குழம அங்கத்தவர்) மற்றும் சிங்கப்பூரின் P&T  குழுமம் ஆகியன சர்வதேச விருதை சுவீகரித்திருந்தன. 

Best Luxury High Rise Architecture பிரிவில் சிங்கப்பூரின் P&T  குழுமம் வெற்றியீட்டியிருந்ததுடன், Best Luxury Mixed-Use Development பிரிவில் இலங்கையின் Best Luxury Mixed-Use Development வெற்றியீட்டியிருந்தது.

Luxury Lifestyle Awards 2020 நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் பிரகாரம், ஒரே பிரிவின் கீழ் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மீது முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டனர். திட்டத்தின் அமைவிடம், திட்டத்தின் செயற்பாடுகள், வடிவமைப்பு மற்றும் விசேட உள்ளம்சங்கள், நிலைபேறாண்மை மற்றும் வலு வினைத்திறன், பாதுகாப்பு மற்றும் இரு நிறுவனங்களின் நன்மதிப்பு ஆகிய விடயங்கள் விருதின் பிரேரிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

P&T  குரூப் குழும பணிப்பாளர் ரிச்சர்ட் சூன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில் உண்மையில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கடுமையான தெரிவு முறைகளின் அடிப்படையில் சுயாதீன ஆய்வுக் குழுவின் மூலமாக இந்த விருது கிடைத்துள்ளது. இலங்கையில் நிர்மாணிக்கப்படும் Capitol TwinPeaks திட்டத்துக்காக இந்த விருது கிடைத்துள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.” என்றார். 

உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் 150 வருட கால ஒப்பற்ற வடிவமைப்பு அனுபவத்தினூடாகவும், சிங்கப்பூர், ஹொங் கொங், சீனா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், வியட்நாம் மற்றும் இதர நாடுகளில் பல்வேறு அலுவலகங்களைக் கொண்டுள்ள  P&T Group, உலகின் பாரிய கட்டடக்கலை மற்றும் பொறியியல் செயற்திட்டங்களைக் கொண்ட நிறுவனமாக அமைந்துள்ளது.

Capitol Developers Ltd  இன் முகாமைத்துவ பணிப்பாளர் ரோஹண வண்ணிகம கருத்துத் தெரிவிக்கையில், “Capitol TwinPeaks திட்டத்துக்காக விருதை வென்றுள்ளமையை பெரும் கௌரவமாக கருதுகின்றோம். Luxury Lifestyle 2020 விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஊயிவைழட வுறinPநயமள இரட்டை விருதுகளை வென்றுள்ளமையினூடாக, வடிவமைப்புத் தரம் மற்றும் சௌகரியம் ஆகியன மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உண்மையில் ஒப்பற்ற முதலீட்டுத் திட்டமாக அமைந்துள்ளதுடன், சிறந்த வாழ்க்கை முறை முதலீடாகவும் அமைந்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 'Luxury Lifestyle 2020’ விருதுகளின் 12ஆவது வருடாந்த வெற்றியாளர்கள் வரிசையில் நாமும் உள்ளடங்கியுள்ளமையையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

50 மாடிகளைக் கொண்ட Luxury Lifestyle 2020 இல் 2, 3, 4 மற்றும் 5 படுக்கை அறைகளைக் கொண்ட தொடர்மனைகள் நிர்மாணிக்கப்படுவதுடன், 40,0000 சதுர அடிக்கும் அதிகமான பொது வசதிகளையும், வணிகப் பகுதிகளையும் கொண்டிருக்கும். தெற்காசியாவின் j sky bridge இன் இருப்பிடமாக இருப்பதுடன், 2021 ஜுன் மாத இறுதியில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58