சிரியாவில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு சிரியாவில் உள்ள காமிஷ்லி நகரில் குர்திஷ் போராளிகளின் தலைமை முகாம் மீது லொரியில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை ஏற்றி வந்த தற்கொலைப்படை வெடிக்கச் செய்தான். 

அதன்பின்னர் சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். 

இந்த தாக்குதல்களில் 31 பேர் பலியானதாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 44 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.