ஹட்டன், அம்பகமுவை சுகாதார வைத்திய அதிகாரியின் பகுதியில் எட்டு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.

21.11.2020 அன்று தமது கடமை பிரதேசத்தில் எழுமாறாக 130 பேரிடம் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவுகள் 22.11.2020 பகல் கிடைக்கப்பெற்றதாகவும் அதில் எட்டு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த எட்டு பேரில் நால்வர் கினிகத்தனை பகுதியையும் ஏனைய நால்வர் ஹட்டன் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  இந் நிலை மிக அபாயகரமான நிலைமையை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் தாம் தினமும் எழுமாறான கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.