( எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா தொற்று காரணமாக அதிரடிப் படை, சி.ஐ.டி., ரி.ஐ.டி. உள்ளிட்ட 71 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 920 பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக புள்ளிவிபரங்கள்  தெரிவிக்கின்றன.  

அதில் 361 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் 559 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்ரன.

 பொலிஸ் தலைமையக தரவுகள் பிரகாரம்,  இதுவரை பொலிஸ் திணைக்களத்துக்குள் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில், அதிகமானோர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினை சேர்ந்தவர்களாவர்.  

பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் மட்டும் 224 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாதிருந்த  ஜே.எஸ்.டி. எனப்படும் நீதித்துறை பாதுகாப்புப் பிரிவிலும் தற்போது தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 இதனைவிட, சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் 68 பேரும்,  பொரளை பொலிஸ் நிலையத்தில்  107 பேரும்,  வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் 45 பேரும்  கோட்டை பொலிஸ் நிலையத்தில் 140 பேரும், சி.ஐ.டி.யில் 14 பேரும், ரி.ஐ.டி.யில் 4 பேரும்  மருதானை பொலிஸ் நிலையத்தில் 23 பேருக்கும்,  டாம் வீதி பொலிஸ் நிலையத்தில் 26 பேருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.