அலரிமாளிகை தற்காலிகமாக மூடப்படவில்லை - பிரதமர் அலுவலகம் அறிக்கை

22 Nov, 2020 | 08:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது.

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை ஆகியவற்றில் பணிபுரியும்  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எவரும்   கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ள  சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முறையாக செயற்படுத்தப்பட்டு அலரி மாளிகை,பிரதமர் அலுவலகம்  ஆகியவற்றில் நாளாந்த கடமைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதமர் அலுவலகத்திலும், அலரி மாளிகையிலும் அத்தியாவசிய சேவைக்களுக்காக மாத்திரமே சேவையாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக  அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்படவுள்ளது என சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.

 பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் இணைப்பிரிவு பாதுகாப்பு ஊழியர் ஒருவருக்கே  முன்பு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right