- லோகன் பரமசாமி -

ஆர்மேனியாவுக்கும், அஸர்பைஜானுக்கும் இடையிலான நகோர்னோகாரபெக் பிராந்தியத்தில் மூண்டிருந்த போர் நிலைமைகள்  ரஷ்யாவின் தலையீட்டினால் முடித்துவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கபட்டிருக்கிறது. 

இந்த வலுக்கட்டாயமான சமாதான உடன்படிக்கை 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி  இலங்கை, இந்திய தலைவர்கள் இடையே ஏற்படுத்தப்பட்ட இந்திய- இலங்கை உடன்படிக்கையை கண்முன் கொண்டுவருவதாக இருக்கிறது. 

நகோர்னோகாரபெக் பிராந்தியத்தில் இடம்பெற்ற சமாதான உடன்படிக்கை ஆர்மேனியமக்கள் மத்தியில் அமைதிவழிப்போராட்டங்களை உருவாக்கி இருக்கிறது. அதேவேளை அஸர்பைஜான் பகுதியில் வெற்றிகளிப்பிற்குள் இட்டு சென்றிருக்கிறது. 

ஆர்மேனிய பிரதமர் நிக்கொல் பஷின்யன் இது ஒருநம்பமுடியாத வலியாக இருக்கின்றது என்று அறிவித்திருக்கிறார். 1989 ஆண்டிற்கு முன்பு சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த ஆர்மேனிய அஸர்பைஜான் பகுதிகள், சோவியத்தின் வீழ்ச்சியுடன் அஸர்பைஜானும் ஆர்மேனியாவும் இரு தனிநாடுகளாக பிரிந்தன.

இருந்த போதிலும் நகோர்னோகாரபெக் பிராந்திய ஆர்மேனிய மக்கள் தமது தாயகத்தை ஆர்மேனியாவின் அயல் நாடான அஸர்பைஜான் நாட்டின் அரசியல் எல்லைக்குள் கொண்டிருக்கிண்றனர்.  தம்மை தனி நாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கையை முன்னிலைப்படுத்தி ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

1994ஆம் ஆண்டிலிருந்து ஹாக்கேசியஸ் மலைபிராந்தியம் போர்களமாகவே இருந்து வந்தது. இந்த போராட்டத்திற்கு ஆர்மேனியாவின்  ஆயுத உதவியும் பயிற்சிகளும் பின்புலத்தில் பக்கபலமாக காணப்பட்டது.

நகோர்னோகாரபெக் பிராந்தியப் பகுதிக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையில் அஸர்பைஜானுக்கு உரிய சிறுபிராந்தியமும் ஆர்மேனியாகளின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரபட்டிருந்தது. 

கடந்த மாதமளவில் அஸர்பைஜான் இழந்த பிரதேசங்களை மீட்கும் வகையில் போரை ஆரம்பித்தது. இழந்த பகுதிகளை மீட்பதற்காக மிக உக்கிரமாக போராடியது. இதனால் பிராந்தியம் முழுவதும் போர் தீவிரமடைந்தது. 

அஸர்பைஜானியர்கள் ஆள்ளில்லா விமானங்கள் மூலமும், தரைவழியாக மலைப்பாங்கு குறைந்த நகோர்னோகாரபெக் பிராந்தியத்தின் தென் பகுதிஊடாகவும் கடும் தாக்குதல்களை நடாத்தினர். 

நகோர்னோகாரபெக் போராளிகளிடம் இருந்து இலகுவாகதாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என்பதே அவர்களது ஒரே இலக்காக இருந்தது. 

போர் உக்கிரம் அடைந்ததையடுத்து ஆர்மேனியாவுக்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பல்வேறு சமாதான முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் அந்தமுயற்சிகள் அனைத்துமே படுதோல்வி கண்டன. 

நகோர்னோகாரபெக் பிராந்தியம் ஆர்மேனியர்களின் கையில் இருந்தபோதிலும்  தமது பிராந்தியத்தை திரும்ப பெற்றுகொள்ளும் ஒரேவழி ரஷ்யாவின் மூலமே என்பதை அஸர்பைஜான் தலைநகரான பகுவில் இருந்த நாட்டின் தலைமை நன்கு அறிந்து வைத்திருந்தது. 

ஏனெனில் சோவியத் ஒன்றியத்தின் கூட்டில் இருந்த நாடொன்று வெளியக சக்திகளின் கைகளில் விழுவதை ரஷ்யா ஒருபோதும் விரும்பாது. 

யுரேசியப் பிராந்தியம் தனதுஆதிக்கதின் கீழ் இருக்கவேண்டும் என்பதில் ரஷ்யா எவ்வளவு தூரம் கவனமாக செயல்பட்டு வருகின்றது அதற்கு நல்ல உதாரணமாகும். 

அந்தவகையில், அஸர்பைஜானின் அதீத தாக்குதல்கள் பிராந்தியத்தில் பல சமநிலையை சீர்குலைத்துவிடும் நிலையை உருவாக்கிகொண்டிருந்தது. அதாவது அஸர்பைஜானின் வெற்றியும் அதன் பின்னரான சூழலில் சர்வதேச தலையீடுகளும் ஏற்படலாம் என்று ரஷ்யா கருதியது. 

குறிப்பாக துருக்கி, அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி தலையீட்டையும் உள்ளீர்க்கும் நிலைமையொன்று உருவாகலாம் என்று ரஷ்யா பூகோள அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையில் கணித்திருந்தது.

அத்துடன் ஆர்மேனிய தலைவர் தமது பக்கத்தை பலப்படுத்தம் வகையில் மேலைதேய சார்புகொள்கைகளை கொண்டவராகவும் இருந்தார். ரஷ்யாவுக்கு சார்பான இராணுவ அதிகாரிகள் சிலரை பதவிமாற்றம் செய்திருந்தார். மேலைதேய நாடுகளில் வாழும் புலம்பெயர் ஆர்மேனியார்கள் அந்தந்த நாடுகளின் உள்ளுர் அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு செலுத்தினர். 

அமெரிக்கசார்பு அரசியல்வாதிகளை ஆர்மேனிய தலைவர் ஊக்கப்படுத்தினார். இவை அனைத்தையும் கருத்தில் எடுத்துகொண்ட ரஷ்யா ஜனாதிபதி விளாடீமிர் புட்டீன் திடீரென போரை நிறுத்தும்படி அறிவித்தார். 

போராளிகளை சரணடையவும் செய்தார். நகோர்னோகாரபெக் அஸர்பைஜானுக்கே சொந்தம் என்றும் தீர்க்கப்பட்டது.

தனது துல்லியமான தகவல்களை அறிந்தகொள்ளகூடிய உளவுவலையமைப்பை பயன் படுத்திய ரஷ்யா ஜனாதிபதி அமெரிக்க தேர்தல் காலங்கள் மற்றும் அதன் வெளியுறவு நடவடிக்கைகள் தணிந்திருந்த நிலைமைகளை தமக்கு சாதகமாகப்  பயன்படுத்தி தனது இராணுவத்தை சமாதான படையாக ஆர்மேனியாவுக்குள் அனுப்பினார். அனைத்து வீதிகளுக்கான தடைகளையும் நீக்கினார் புட்டீன். 

ஆர்மேனிய மக்கள் கொந்தளித்தனர் ஒருசில மேலைத்தேய நாடுகளின் செய்தி நிறுவனங்கள் ஆர்மேனியாவில் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் உள்நாட்டு கலகத்தை உருவாக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியிட்டாலும் அவற்றை பொருட்படுத்தாது தனது நகர்வுகளை செவ்வனே செய்து வரலானார். 

ஆர்மேனியாவுக்கும் அதன் மேற்கே உள்ள துருக்கிக்கும் இடையில் நீண்டகால முரண்பாடுகள் தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டிருந்தாலும் துருக்கியுடன் பல்வேறு முரண்பாடுகளை கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடான கிரேக்கத்துடன் ஆர்மேனியா நல்லுறவை பேணிவருகிறது. 

அமெரிக்க இராஜாங்க செயலாளர்மைக் பொம்பியோ அண்மையில் கிரேக்கத்திற்கு சென்றிருந்தபோது ஹாக்கேசியஸ் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் அரசு ஜனநாயகத்தை நிலைநாட்டுத்தல்,மனிதஉரிமை மீறல்களை தடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் தலையெடுப்பதற்கு முன்தாக புட்டீன் தனது யுரேசிய பிராந்தியத்தில் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் ஆர்மேனிய,அஸர்பைஜான் விடயத்தை கையண்டுள்ளார். 

எவ்வாறிருப்பினும் இலங்கைத் தமிழர்களின் தாயக பூமிக்கு அமைதிப்படைகளாக சென்ற இந்திய இராணுவம் தாம் பாதுகாக்கச் சென்ற மக்களுக்கு எதிராக திரும்பியதைப் போன்று ரஷ்யா சமதானபடைகளும் ஆர்மேனியர்களை பலிக்கடாக்களாக ஆக்காது இருந்தால் அதுவே மேலானதாகும்.  

ஏனெனில் ரஷ்யாவின் கிரெம்ளின் பார்வையில் ஆர்மேனிய தலைவர் இனிமேல் ரஷ்யா விசுவாசியாக இருக்கமாட்டார் என்றவொரு எண்ணப்பாடு எழுந்துவிட்டது. ஆகவே மிகவிரையில் அவர் பதவியில் இருந்த இறக்கப்படலாம் என்பது பலரதும் பார்வையாக உள்ளது.

ரஷ்யா கூட அவ்விதமான நடவடிக்கையையே கைலெடுக்கும். ஏனெனில் தனது ஆதிக்கத்தினை ஆர்மேனியாவில் நிலைநிறுத்தவதனால் ரஷ்யாவுக்கும் வேறு வழியில்லை.