சேலைன் குழாயில் கழுத்து இறுகி சிறுவன் பரிதாபமாக பலி! புத்தளத்தில் சம்பவம்

22 Nov, 2020 | 06:23 PM
image

புத்தளம் புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சேலைன் குழாயில் கழுத்து இறுகிய நிலையில் சிறுவன் ஒருவன் பரிதாகமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (21) பதிவாகியுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 09  வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை (21) நண்பகல் வேளை, குறித்த சிறுவன் மதிய உணவு உட்கொண்ட பின்னர் விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

இதன்போது சிறுவனின் தாய் தனது இரண்டாவது மகனுக்கு மதிய நேர உணவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தனது மூத்த மகன் வீட்டு வளவுக்குள் உள்ள கொய்யா மரத்தில் கட்டப்பட்டிருந்த (intravenous infusion set) சேலைன் குழாயில் கழுத்து இறுகி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த தாயின் அழுகுரலைக் கேட்ட அயலவர்கள் அங்கு வருகை தந்து, மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்ட குறித்த சிறுவனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனையில் குறித்த சிறுவன் கழுத்து இறுகியமையால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சிறுவனின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08