இராணுவம், பொலிஸ் எனத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: Digital Desk 4

22 Nov, 2020 | 04:24 PM
image

(செ.தேன்மொழி)

பொல்பித்திகம பகுதியில் இராணுவ சிப்பாய் என்றும் உதிவி பொலிஸ் அத்தியட்சகர் என்றும் குறிப்பிட்டு பல மோசடி செயற்பாடுகளில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,

பொல்பித்திகம பகுதியில்  இராணுவ சிப்பாய் என்றும், புலனாய்வு பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் என்றும் தங்களை போலியான முறையில் அடையாளப்படுத்தி மோசடிகளில் ஈடுப்பட்ட இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இவ்வாறு போலியான முறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த பகுதிகளில் பல மோசடிகளை செய்து வந்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்று தன்னை அடையாளம் படுத்திக் கொண்ட 47 வயதுடைய நபர் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ,மற்றைய நபர் மாஹவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் என்று தன்னை அடையாளம் படுத்திக் கொண்ட நபர் ,பொலிஸ் உடையில் புகைப்படம் ஒன்றையும் அருகில் வைத்துக் கொண்டுள்ளதுடன்,அதனை காண்பித்து இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்