ஸ்ரீ லங்கா ரமண மஹா நிக்காய பீடத்தின் மகாநாயக்கவின் புதிய மகாநாயக்க தேரராக அக்கமஹா பண்டித மக்குலவே விமல அனுநாயக்க தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா ரமண மஹா நிக்காயவின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் ஊடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை (17.11.2020) ஸ்ரீ லங்கா ரமண மஹா நிக்காய பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபான பிரேமசிறி தேரர் தனது 98 ஆவது அகவையில் காலமாகியிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த பீடத்திற்கு புதிய மகாநாயக்க தேரராக அக்கமஹா பண்டித மக்குலவே விமல அனுநாயக்க தேரர் நியமிக்கப்பட்டிருந்தமையுமு் குறிப்பிடதக்கது.