முல்லைத்தீவு மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் மோட்டார் சைக்கிளில்  பயணித்த இராணுவ சிப்பாய்  ஒருவர் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த சிப்பாய்  நேற்று (21.11.2020) இரவு மோட்டார் சைக்கிளில்  மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் வீதியில் பயணித்த போது மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் படையினரின் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.