பி.சி.ஆர் பரிசோதனையை பயணிகள் மேற்கொள்ளத் தேவையில்லை என்ற பட்டியலில் பாகிஸ்தான் இலங்கையைச் சேர்த்துள்ளது.

குறித்த இவ் உத்தரவானது நவம்பர் 27 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியிட்ட 21 நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியா , சீனா , ஜப்பான் , நியூசிலாந்து , மாலைதீவு , மற்றும் சவுதி அரேபியா , ஆகிய நாடுகள் அடங்குகின்றன.

அந்த வகையில் ஐக்கிய அரபு இராச்சியம் வெளியிட்ட கொவிட் 19 பாதுகாப்பு பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.