களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழு கிராம சேவகர் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி போகஹவத்த, பமுனுமுல்ல (முஸ்லிம்), கிரிமன்துடாவ, கோராவல, அடுலுகம மேற்கு, பமுனுமுல்ல, கலகஹமண்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளே தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட்- 19 வைரஸ் தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது.

கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய தினம் (23) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளது.

01. கொழும்பு மாவட்டம்

• பொரளை

• வெல்லம்பிட்டி

• கொழும்பு கோட்டை

• கொம்பனித்தெரு

இருப்பினும் பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்துமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொம்பனித்தெருவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடந்தும் இருக்கும்.

கொழும்பு மாவட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 13 பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே இருக்கும்.

• மட்டக்குளி

• முகத்துவாரம் (மோதர)

• புளுமெண்டல்

• கொட்டாஞ்சேனை

• கிராண்ட்பாஸ்

• கரையோர பொலிஸ்

• டேம் வீதி

• மாளிகாவத்த

• தெமட்டகொட

• வாழைத்தோட்டம்

• மருதானை

• புறக்கோட்டை

• ஆட்டுபட்டித்தெரு

02. கம்பாஹ மாவட்டம்

• ஜா-எல

• கடவத்தை

ஆகிய பொலிஸ் பிரிவுகள் மாத்திரம் நாளை அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவிருப்பதுடன் கம்பாஹ மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் அதேநிலைமையிலேயே இருக்கும்.

• நீர்கொழும்பு

• ராகம

• வத்தளை

• பேலியகொட

• களனி