ஹப்புத்தளை ரத்கரவ்வ ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை 22-11-2020 முற்பகல் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாகவும் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தகம என்ற இடத்தைச் சேர்ந்த சந்துன் தில்ஷான் என்ற 26 வயது நிரம்பிய இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளைப் பொலிசார் தெரிவித்தனர்.

மரக் கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரங்கள் வெட்டும் தொழிலில் ஈடுபடுபவர்களில் ஒருவர் இவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நபருடன் எட்டுப் பேர் குளிக்கச் சென்றிருந்த போதிலும் இவர் மட்டுமே நீரில் மூழ்கியுள்ளார். ஏனைய ஏழு பேரும் தப்பினர்.

இது குறித்து ஹப்புத்தளை பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே பொலிசாரும், தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த சுழியோடிகளும் குறித்த ரத்கரவ்வ ஆற்றிற்கு சென்று நீரில் மூழ்கி மரணமாகியவரைத் தேடியும் கண்டுப்பிடிக்க முடியவில்லை தொடர்ந்தும் தேடுதல்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் ஹப்புத்தளைப் பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.