இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ்ஜின் தந்தை மொஹமட் கெளவுஸ் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

எதிர்வரும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சிராஜ் இந்திய கிரிக்கெட் அணியினருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலேயே அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பினால் நாடு திரும்பலாம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம்  தரப்பில் அவருக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியினருடன் தங்கயிருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

53 வயதான கெளவுஸ் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, போராடி வந்த நிலையிலேயே ஐதராபாத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதுடன், சிராஜின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார்.

தற்போது 14 நாள் தனிமைப்படுத்தலில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் பின்னர் கடந்த 13 ஆம் திகதி அவுஸ்திரேலியா சென்றுள்ளது.

26 வயதான சிராஜ் இதுவரை ஒரு ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோருடன் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளராகவும் இத் தொடரில் தற்போது உளளார்.

Complete fixtures 

2nd ODI: November 29 at SCG, Sydney (D/N) – 03:40 AM GMT / 9:10 AM IST

3rd ODI: December 2 at Manuka Oval, Canberra (D/N) – 03:40 AM GMT / 9:10 AM IST

1st T20I: December 4 at Manuka Oval, Canberra (Night) – 08:10 AM GMT/ 1:40 PM IST

2nd T20I: December 6 at SCG, Sydney (Night) – 08:10 AM GMT/ 1:40 PM IST

3rd T20I: December 8 at SCG, Sydney (Night) – 08:10 AM GMT/ 1:40 PM IST

1st Test: December 17-21 at Adelaide Oval, Adelaide (D/N) – 04:00 AM GMT/ 9:30 AM IST

2nd Test: December 26-30 at MCG, Melbourne – 11:30 PM GMT (Dec 25) /5:00 AM IST

3rd Test: January 7-11 at SCG, Sydney – 11:30 PM GMT (Jan 06) /5:00 AM IST

4th Test: January 15-19 at The Gabba, Brisbane – 12:00 AM GMT/ 5:30 AM IST