வடக்கு மற்றும கிழக்கு மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வட , கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் உள்ள கடல் எல்லைகளில் மீன் பிடியில் ஈடுப்படுபவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் சுழற்சி அலைகள் உள்பட இரண்டு அடி வரை அலைகள் உயருமெனவும் அனர்த்த முகாமைத்து நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாளை திங்கட்கிழமை முதல் மழை அதிகரிக்க கூடுமென தெரிவித்த அவர் வடக்கு , வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 60 கிலோ மீற்றர் வேகத்தல் பலத்த காற்று வீசுமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த பகுதியில் மீன்பிடியாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.