எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள  லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக செயற்படுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக

 

கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக லசித் மாலிங்க  செயற்படுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக தனுஷ்க குணதிலக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காலி அணியின் சர்வதேச நட்சத்திர வீரரான சஹீட் அப்ரிடி தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அவர் இலங்கைக்கு வந்த பின்னரும் 7 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளமையினால் அணி நிர்வாகம் தனுஷ்க குணதிலகவை தலைவராக நியமிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.