மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Vishnu

22 Nov, 2020 | 09:06 AM
image

கொவிட்-19 பரவலால் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 167 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 68 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் நேற்றிரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

அதேபோன்று கட்டாரின், தோஹாவிலிருந்து 42 இலங்கையர்கள் கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர்-668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன் மேலும் 57 இலங்கையர்கள் துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் அதிகாலை 3.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் கொழும்பு நவலோக, லங்கா மற்றும் ஆசிரி தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களால் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08