திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேரை சுட்டு படுகொலை  செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த வழக்கு இன்று அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு, 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி  இரவு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.