கடன் அட்டைகளின் பாவனையால் 412 கோடி ரூபாய்கள் வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தப்பட்டுள்ளது - விஜயதாச ராஜபக்ஷ

22 Nov, 2020 | 12:20 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவை கையாள 3000 பில்லியன் கடன் பெறவேண்டியுள்ளது, சர்வதேச கடன்களை பெற்றுக்கொண்டால் தேசிய ரீதியில் எவ்வாறு செலவுகளை கட்டுப்படுத்துவது என கருத்தில் கொள்ளவேண்டும் என ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். 

2015 ஆம் ஆண்டு கணிப்பின் பிரகாரம் ஒரு ஆண்டில் 412 கோடி ரூபாய்கள் கடன் அட்டைகளின் மூலமாக வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

வரவு செலவு திட்டமொன்று முன்வைக்கும் வேளையில் இது தான் சிறந்த வரவு சிலவு திட்டம் என ஆளும் கட்சியும், இதுதான் மோசமான வரவு செலவு திட்டம் என எதிர்கட்சியும் கூறுவதே வழக்கம். ஆனால் இது அரசாங்கத்திற்கு மாத்திரம் சார்ந்த விடயம் அல்ல, நாட்டின் அவசியம். 

எனவே இதில் ஆளும் எதிர் கட்சிகள் இணைந்தே தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். 2021 ஆம் ஆண்டுக்கு 3000 பில்லியன் கடன் தேவைப்படுகின்றது. இந்த தொகை முழுமையாக எமக்கு கிடைக்கும் என கூற முடியாது. 

ஆனால் நாம் வரையறுத்துள்ள தொகையை விடவும் அதிக கடன்களை நாம் பெற்றுக்கொள்ள நேரும். இதனை தேசிய ரீதியில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும் ஆராய வேண்டும்.

நாட்டு மக்களின் கைகளில் பணம் புழங்கினால் அது ஆரோக்கியமான விடயம், ஆனால் இன்று நாட்டின் அனர்த்த நிலையில் மக்களிடம் பணம் இல்லை, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அடியாக விழும். எனவே புதிதாக பணம் அச்சிட வேண்டும். அதேபோல் எமது பணம் வெளிநாடுகளுக்கு செல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் இங்கு கடன் அட்டைகளில் வியாபாரம் செய்யும் வேளையில் அதில் ஒரு தொகை வெளிநாட்டிற்கு செல்கின்றது. 

இதனை தவிர்க்க தேசிய ரீதியில் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு கணிப்பின் பிரகாரம் ஒரு ஆண்டில் 412 கோடி ரூபாய்கள் கடன் அட்டைகளின் மூலமாக வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளோம். 

எனவே கியூ.ஆர் முறைமையை 2018 ஆம் ஆண்டில் கொண்டுவந்தமை வெற்றியளித்தது. ஏனைய நாடுகளும் இந்த திட்டத்தை கையாண்டு வெற்றி கண்டுள்ளனர். இந்தியா இதற்கு நல்லதொரு உதாரணம்.

எனவே நிதி அமைச்சு இதனை கருத்தில் கொள்ள வேண்டும், மத்திய வங்கி என்னதான் முயற்சிகளை எடுத்தாளும் நிதி அமைச்சு இதில் அக்கறை செலுத்தியாக வேண்டும். சுயாதீன நிறுவனங்கள் அரசியல் மயமாவதை தடுக்க வேண்டும்.

குறிப்பாக மத்திய வங்கியில் அரசியல் தலையீடுகள் இருந்ததன் காரணமாகவே இலங்கையை சேராத ஒருவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஆனார். ஆகவே இந்த செயற்பாடுகள் தடுக்கப்படும் விதமாக நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04