நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு : சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

21 Nov, 2020 | 10:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு தினங்களில் சுமார் ஆயிரத்தால் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு தினமும் குறைந்தது ஒரு மரணமாவது பதிவாகிறது. எவ்வாறிருப்பினும் இனங்காணப்படும் தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடை அல்லது பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர் என்று சுகாதாரத் தரப்பு உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்த இரு கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை பதினாராயிரத்தைக் கடந்துள்ளது. 

மினுவாங்கொடை கொத்தணி உருவானதன் பின்னர் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். எனினும் தற்போது கொழும்பு மாவட்டமே எச்சரிக்கை மிக்கதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை வரை 6606 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளனர். இதே போன்று கம்பஹாவில் 5796 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 10.30 மணி வரை 257 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19 537 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 5873 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு , 13 590 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மாலை வரை மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய 16 022 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று பதிவான மரணம்

கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆணொருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட இதய பாதிப்பாகும். அதற்கமைய நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வரை 617 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினமும் சிறைச்சாலைகளில்; 63 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது. 

இவ்வாறு இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் சிறைக்கைதிகள் 578 பேர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் 39 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இங்கு இன்று மாலை வரை 236 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போகம்பரை பழைய சிறைச்சாலையில் 170 பேரும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 120 பேரும் பூசா சிறைச்சாலையில் 49 பேரும் குருவிட்ட சிறைச்சாலையில் 16 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய கைதிகள் மற்றும் அதிகாரிகள் கல்லேல்ல, வெலிகந்த, கந்தக்காடு மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47