தாய்­லாந்தில் நாட்டில் மிகவும் பர­ப­ரப்­பான வீதி­யொன்றில் பலர் முன்­னி­லையில் பாலியல் உறவில் ஈடு­பட்ட  அய­ர்லாந்தைச் சேர்ந்த 24 வய­தான சுலீவன் எனும் இளை­ஞனும் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 21 வய­தான நதீன் எனும் யுவ­தி­யும் பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யுள்­ளனர்.

சுலீவன் தாய்லாந்திற்கு சுற்றூலா வந்தவரும் , நதீன் பரி­மாற்று முறையில் தாய்­லாந்தில் கல்வி கற்க வந்த மாண­வி எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­ரு­வரும் கடந்த 18 ஆம் திகதி  தாய்­லாந்தின் கோஹ் பி பி எனும் தீவில் விருந்­தொன்றில் கலந்து கொண்­டபின் ஹோட்டல் ஒன்­றுக்கு வெளியே வீதி­யொன்றில் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.

இந்த ஜோடி­யி­னரின் நட­வ­டிக்­கைக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர். இந்த ஜோடி­யினர் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­போது பதி­வு­செய்­யப்­பட்ட படங்­க­ளையும் பலர் இணை­யத்தில் வெளி­யிட்­டி­ருந்­தனர்.

இதை­ய­டுத்து இவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்த தாய்­லாந்து பொலிஸார் கடந்த ஞாயி­று நடந்த ஊடகவியளாலர் சந்திப்பிற்கு இவர்­களை அழைத்து வந்­தனர்.

இவ் ஊடகவியளாலர் சந்திப்பின் போது தமது அநா­க­ரிக நட­வ­டிக்­கைக்­காக தாம் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோரு­வ­தாக இவ்­வி­ரு­வரும் தெரிவித்தனர்.தாங்கள் அவ்வேளையில் அதிக மதுபோதையில் இருந்ததால் இத்தவறு இடம்பெற்றதாகவும் தெரிவித்தனர்.  இவர்களுக்கு தாய்லாந்து அதிகாரிகளால் 60 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.