யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில்  மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான 7 மற்றும் 5 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மழைநீர் சேகரிக்கும் குழியொன்றுக்குள் இரு சகோதரர்களும் தவறி வீழ்ந்துள்ள நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.