(ரொபட் அன்டனி)

பல்வேறு  நன்மைகளை பயக்கும் வகையில் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையினை நிறுவுவதற்கு அமைச்சரவை  அங்கீகாரம்  கிடைத்துள்ளது என்று அமைச்சரவை  பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க  தெரிவித்தார். 

இது தொடர்பில்  மலைநாட்டு புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு  மற்றும் சமுதாய  அபிவிருத்தி அமைச்சர்   பழனி  திகாம்பரம்   முன்வைத்த  யோசனைக்கு  அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.