குடித்த மதுவிற்கு கொடுக்க பணம் இல்லாததால் தனது ஆடைகளை எல்லாம் மதுபானசாலை பணியாளரிடம் அடமானம் வைத்துவிட்டு நிர்வாணமாக வெளியேறிய நபர் நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவில் செக் குடியரசில் உள்ள பிரெரோவ் நகரில் கடந்த திங்கட்கிழமை மதுசாலையில் தேவையான அளவுக்கு மது வகைகளை வாங்கி குடித்த பின்னர் தனது கையில் பணம் இல்லாமல் இருப்பதை அறிந்து  திடுக்கிட்டார்.

குடித்ததற்கான பற்றுசீட்டினை கொண்டு வந்த பணியாளரிடம் விபரத்தை கூறியபோது, ‘பணத்தை எண்ணி வை.., இல்லாவிடின்  ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு வெளியே போ. பணத்தை கொண்டுவந்து தந்துவிட்டு ஆடைகளை மீள வாங்கிக்கோ..,’ என தெரிவித்துள்ளார்.

இதை கௌரவ பிரச்சனையாக கருதிய அந்த நபர் தான் அணிந்திருந்த உடைகள் அத்தனையையும் கழற்றி மதுசாலையில் வைத்து விட்டு தனது கையடக்கத்தொலைபேசியில் பேசியபடி வெறும் காலுறையினை அணிந்த கால்களுடன் சாலையில் இறங்கி சென்றுள்ளார்

அந்த வீதியின் வழியாக சென்ற வாகன சாரதிகளும், பாதசாரிகளும் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபற்றி பொலிஸாருக்கு முறைப்பாடும் அளித்துள்ளனர். 

இதைப்பற்றி எல்லாம் கவலையேப்படாமல் நிர்வாணமாக நடந்து சென்ற அந்த நபர், அருகாமையில் உள்ள மற்றொரு மதுசாலையில் மது அருந்தி கொண்டிருந்த தனது நண்பரிடம் இருந்து கடனாக பணம் வாங்கிவந்து, தனது உடைகளை அடமானம் வைத்திருந்த மது சாலைக்கு செலுத்தினார்.

இந்த காட்சிகள் எல்லாம் அந்த மதுசாலையின் அருகாமையில் உள்ள வீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது.