இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி முதலாவது குழுவில் இலங்கை, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது குழுவில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, காலிறுதிப் போட்டியில் இரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.