பண்டாரகமவில் உள்ள எட்டு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தகையில் அட்டுழுகம பகுதியில்  மேற்கொள்ளப்படட பி.சி.ஆர் பரிசோதனையின் பின் அங்கு 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாக களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பகுதியில் எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, அப்பகுதியின் எட்டு கிராமசேவகர் பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.