தற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும்.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது.

இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது செய்திகளை வட்ஸ்அப்பில் இருந்து முழுவதுமாக நீக்க முடியும்.

அதாவது இந்த செய்திகளை நீக்கிய பின் நீங்கள் உட்பட யாரும் பார்க்க முடியாது. இருப்பினும், வட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட செய்திகளைக் காண ஒரு வழி உள்ளது.

நீக்கிய வட்ஸ் ஆப் செய்திகளை எவ்வாறு வாசிப்பது?

படி-1 முதலில் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் WhatsRemoved+ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

படி-2 செயலியை பதிவிறக்கம் செய்த பின் அது கேட்கும் தகவல்களுக்கு அனுமதி வழங்கவும்

படி-3  பின்னர் முகப்பு பக்கத்தில் இருக்கும் பட்டியலில் வட்ஸ்அப்பை தேர்வு செய்யவும்.அதைதொடர்ந்து திரையில் வரும் save files என்பதை தேர்வு செய்வதன் மூலம் செயலி பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

படி-4 வட்ஸ்அப்பில் உள்ள குறுஞ்செய்திகள் முதல் டெலிட் செய்த அனைத்து குறுஞ்செய்திகளும் WhatsRemoved+ செயலியில் வந்துவிடும்.

அண்ட்ரோய்ட் போன்களுக்கு மட்டுமே இதைப் போன்ற வசதிகள் உள்ளது. ஆப்பிள் போன்களுக்கு இதைப் போன்ற எந்த செயலியும் இல்லை. மேலும் ப்ளே ஸ்டோரில் இதுப்போன்று பல செயிலகள் இருந்தாலும் இதற்கு பலர் சிறந்த ரேங்க்கிங் கொடுத்துள்ளனர்.