சிறிய இடைவெளிக்குப் பிறகு விரல் வித்தை நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், உருவாகியிருக்கும் திரைப்படம் 'மாநாடு'. 

இப்படத்தில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், எஸ்.ஏ.சந்திரசேகர், டேனியல் போப், மனோஜ் கே.பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அரசியலை மையப்படுத்திய மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் சிலம்பரசன் அப்துல் ஹாலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடித்திருப்பதாலும், அது தொடர்பான புகைப்படம் வெளியானதாலும் ரசிகர்கள் இணையத்தில் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.