கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலையென பரவியிருக்கும் இந்த தருணத்தில், இந்த தொற்று காரணமாக மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் மனநல பாதிப்பை மீட்பதில் இயற்கை பேருதவி புரிந்து வருவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக எம்மில் பல்வேறு வயதினரும் குறிப்பாக பதின்ம வயதினர், வளரிளம் பருவத்தினர், இளம் வயதினர், மத்திம வயதினர், மூத்த வயதினர் என ஒவ்வொரு பருவத்தில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விடயங்களாலும் மனச்சோர்வு அடைகிறார்கள். இதனால் அவர்களின் மன ஆரோக்கியம் வெவ்வேறு நிலைகளில் பாதிக்கப்படுகிறது.
இதிலிருந்து இவர்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள இயற்கையை நாடுகிறார்கள். நகரம் சார்ந்த சார்ந்தவர்கள் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வதன் மூலம் தங்களை மீட்டெடுத்துக் கொள்கிறார்கள்.
வேறு சிலர் மலைவாசஸ்தலங்கள் சென்று உரக்க குரலெழுப்பி தங்களுடைய மனநல பாதிப்பிலிருந்து மீட்டெடுத்துக் கொள்கிறார்கள். இதை போல் ஒவ்வொருவரும் தங்களை சுற்றி இருக்கும் இயற்கையின் உதவியுடன் திருப்தி, மனநிறைவு, மகிழ்ச்சி.போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
இதன் மூலம் மனிதர்களின் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதில் இயற்கை முக்கிய பங்காற்றுகிறது என்பது தெரிய வருகிறது.
இதன் காரணமாகவே இயற்கை சூழல்கள், வளங்களை மட்டுமல்ல, எம்முடைய மனநலத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன் மனிதர்களின் மனநிலை பாதிப்பு, இயற்கை சூழல்கள், உயிரினங்களின் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம்.. ஆகியவற்றின் இடையேயான தொடர்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.
டொக்டர் ராஜ்மோகன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM