லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை லசந்த விக்ரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்ட முடிந்ததாக லசந்தவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதுல எஸ்.ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பாக இன்று (27) இடம்பெற்ற அடையாள அணி வகுப்பின் போது , கொலைச் சம்பவத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டியதாக கூறப்படும் குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரியை சாரதியால் அடையாளம் காட்ட  முடிந்ததாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அடையாள அணிவகுப்பு கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னிலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த கொலையை நேரில் கண்ட சாட்சியங்களை எதிர்வரும் 3 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தின் இன்று உத்தரவிட்டுள்ளார் எனவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.