லங்கா பிரீமியர் லீக்கின் அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு விளையாடவிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொஹைல் தன்வீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அவர் இலங்கைக்கு வந்துள்ளதோடு, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையில் இடம்பெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் சுற்று தொடர்பில் அவரது டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் படங்கள் என்பனவற்றை பதிவிட்டு , கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு லங்கா பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிகளில் பங்கேற்க வருகை தந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான இரண்டாவது வெளிநாட்டு வீரர் சொஹைல் தன்வீர் ஆவார்.

இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த  கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்திர போல் சிங் நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்து கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.