பல்லேகலை  மைதானத்தில் நிர்வாண கோலமாக நடனமாடிய அவுஸ்திரேலிய பிரஜை அலெக்ஸ் ஜேம்ஸிற்கு (26)  3000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வார கால சிறைத்தண்டனையும் விதித்து கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியில் தேநீர் இடைவேளையின் பின் மழைக்குறுக்கிட்ட போது குறித்த நபர்  மதுபோதையில் மைதானத்திற்குள் நுழைந்து நிர்வாணமாக நடனமாடியமை குறிப்பிடத்தக்கது.