மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளார்.

இதன் மூலம் 100 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மூன்றாவது ரஞ்சித் தொடர் வீரர் என்ற பெருமையையும் சந்தோர்கர் பெறுவார்.

கடந்த ஜூன் மாதம் மும்பையில் காலமான வசந்த் ரெய்ஜி இந்த மூவருள் ஒருவர் ஆவார்.

ஒரு நடுத்தர துப்பாட்ட வரிசை வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான சந்தோர்கர் மகாராஷ்டிராவுக்காக ஐந்து ரஞ்சி தொடர்களில் (1943-44, 1946-47, 1950-51) விளைாயடியுள்ளார்.

தற்போது சந்தோர்கர் மும்பையின் புறநகர்ப் பகுதியான டோம்பிவ்லியில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.

திங்கர் பல்வந்த் தியோதர் (14 ஜனவரி 1892 - ஆகஸ்ட் 24, 1993) மற்றும் வசந்த் நைசத்ராய் ரெய்ஜி (26 ஜனவரி 1920 - 13 ஜூன் 2020) ஆகியவர்களைத் தொடர்ந்து 100 வயதினை பூர்த்தி ரஞ்சி தொடர் வீரர் ஆவார்.