தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் பிரபல சினிமா நடிகர் வில்சன் கருவை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முகக்கவசம் அணியாத மற்றும் பொலிஸாரின் கடமைகளை சீர்குலைக்கு முயன்ற குற்றச்சாட்டிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு பொலிஸார் அவரை முகக்கவசம் அணியுமாறு தெரிவித்த போது குறித்த நபர் அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.