Formula Student UK 2016 கார் பந்தையப்போட்டியில் 3 விருதுகளை வென்று சாதனைபடைத்த “D-Mora P1” 

Published By: Priyatharshan

27 Jul, 2016 | 05:12 PM
image

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மாணவர்களால் வடிவமைப்புச் செய்யப்பட்ட D-Mora P1 என்ற பந்தயக் கார், உலகில் இடம்பெற்ற மிகப் பாரிய மோட்டார் விளையாட்டுப் போட்டியான “Formula Student 2016” நிகழ்வில் 3 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையில் முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களுள் ஒன்றான Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனம் இதற்கு ஆதரவு வழங்கியுள்து.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள Silverstone Circuit பந்தயத் திடலில் Formula Student 2016 போட்டி  அண்மையில் இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் இலங்கையிலிருந்து மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் அணி  முதற்தடவையாக பங்குபற்றியிருந்தது.

இப்போட்டியில் 30 நாடுகளிலிருந்து, 130 இற்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிட்ருந்தன.

இயந்திரவியல் பொறியியல் கற்கை நிலையத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற, Formula Student போட்டியானது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான கல்விசார் மோட்டார் விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ளதுடன், தொழிற்துறை மற்றும் பிரபல பொறியியலாளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. 

உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் நிலையான மற்றும் வலுவான நிகழ்வுகளில் போட்டியிடுவதற்கு, ஒரு வருடத்தில் தனி ஆசனத்தைக் கொண்ட பந்தயக் கார் ஒன்றை வடிவமைத்து, கட்டியெழுப்புமாறு சவால் விடுவதுடன், பந்தயக் காரின் சோதனை ஓட்டங்கள் மற்றும் தொழிற்படுதிறனை தெளிவாக விளங்கி, அவற்றை வெளிக்காண்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 

Formula Student போட்டியில் பங்குபற்றிய டசின் கணக்கான முன்னாள் மாணவர்கள் Formula 1 போட்டி மட்டத்திற்கு செல்லுமளவிற்கு தமது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் போட்டியாளர்கள் உலகிலுள்ள மிகப் பாரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்காலத்திற்கு உகந்த கார்களை வடிவமைத்து, வெளிக்கொண்டு வரும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து கலந்துகொண்ட SHARK அணிக்கு முற்றுமுழுதான அணுசரனையை DIMO வழங்கியதுடன், ஹர்ஷன கலஷாவின் தலைமையின் கீழ் அணியில் 18 பேர் இடம்பெற்றிருந்தனர். 

"Best Newcomer in Class 1" மற்றும் "Dedication to Formula Student Award" ஆகிய இரு அணி நிலை விருதுகளும் மிகத் திறமையாக வாகனத்தை ஓட்டும் ஆற்றலுக்காக இந்துருவ முனசிங்க தனதாக்கிக்கொண்ட "Top Individual Driver" விருதுமாக மொத்தமாக 3 விருதுகளை இந்த அணி வென்றுள்ளது. 

வகுப்பு 1 மற்றும் 2 என இரு பிரிவுகளின் கீழ் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிவு 2 ஆனது வடிவமைப்பு தொடர்பான விளக்க படைப்பாக்கங்கள் மற்றும் செலவு மதிப்பீடு தொடர்பில் கவனம் செலுத்தியது. 

இதேவேளை வகுப்பு 1 ஆனது மிகவும் சவால்கொண்டதாக அமைந்ததுடன், Formula Student பந்தயக் காரை வடிவமைத்து, ஏனைய விளக்க படைப்பாக்கங்களையும் நிகழ்த்துமாறு அணிகள் கேட்கப்பட்டிருந்தன. Scrutineering, Tilt, Brake மற்றும் எழுப்பும் ஒலி தொடர்பான சோதனைகளுடன் கடுமையான சோதனை நடைமுறைகளுக்கு SHARK அணி உள்ளாக்கப்பட்டது. வடிவமைப்பு, செலவு மதிப்பீடு மற்றும் நிலைபேண்தகமை மற்றும் வர்த்தக விளக்க படைப்பாக்கங்கள் அடங்கிய முன்னோட்ட நிகழ்வுகளில் வெற்றிகரமாக பங்குபற்றியிருந்த SHARK அணி Skid Pad, Acceleration, Sprint, Endurance மற்றும் Efficiency போன்ற தொழில்நுட்பரீதியாக வலுவான நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருந்தது.

அடிப்படையிலிருந்து வடிவமைக்கப்பட்ட D-Mora P1 பந்தயக் காரை முழுமையாக வடிவமைப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்றன. இப்பீடத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு டிக்கட் விற்பனை மூலமாக இச்செயற்திட்டத்திற்கான ஆரம்ப நிதி திரட்டப்பட்டிருந்தது. 

பொறியியல் பீடத்தின் 2008 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்கள் வழங்கிய நன்கொடையின் மூலமாக தெல்கந்த என்ற இடத்தில் அமைந்துள்ள Advance Engineering Workshop என்ற நிறுவனத்தில் அடிச்சட்டம் உருவாக்கப்பட்டது. காரை வடிவமைத்து, உருவாக்குவதில் ஆரம்ப கட்டங்களின் போது SHARK அணி மட்டுப்படுத்தப்பட்ட நிதி காரணமாக சிரமங்களை எதிர்கொண்ட போதிலும்,  DIMO நிறுவனம் தேவையான நேரத்தில் வழங்கிய நிதி மற்றும் இதர வசதிகள் காரணமாக உலக அரங்கில் போட்டியிடும் திறன்வாய்ந்த அதிசிறந்த கார் ஒன்றை வடிவமைக்க இடமளித்துள்ளது. 

மேலும், வலிமையான, உலகத்தரம்வாய்ந்த பந்தயக் காரை வடிவமைத்து, தயாரிப்பதற்கு சியம்பலாபே, வெலிவேரிய மற்றும் கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள DIMO நிறுவன வளாகங்களில் பூரண அனுமதியுடன் அங்குள்ள வசதிகளை உபயோகிக்கும் வாய்ப்பு மற்றும் நிபுணத்துவ ஆலோசனையுடனான வழிகாட்டல் ஆகியவற்றையும் DIMO வழங்கியிருந்தது.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, நிகழ்வில் உரையாற்றுகையில்,

“மிகவும் திறமைசாலிகளைக் கொண்ட இந்த மகத்தான அணி, சர்வதேச நிகழ்வில் அடையப்பெற்ற இந்த சாதனைகள் மூலமாக இலங்கை அன்னைக்கும், மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்ப்பித்துள்ளது. 

அனைத்து எதிர்பார்ப்புக்களையும் கடந்துள்ள அவர்கள் உலகில் வேறு எந்தவொரு நாட்டிற்கு இணையாகவும் தீவிர உணர்வு, திறமை மற்றும் ஆற்றல் தாராளமாக இலங்கையில் உள்ளதை அவர்கள் முழு உலகிற்கும் காண்பித்துள்ளனர். 

இந்த அதிசிறந்த பயணத்தில் அங்கம் வகித்துள்ளதையிட்டு DIMO நிறுவனம் மிகவும் பெருமை கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் அவர்கள் இதைவிடவும் மகத்தான சாதனைகளை புரிவர் என நாம் நம்புகின்றோம்.”

மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டிய DIMO  நிறுவனத்தின் பணிப்பாளரான விஜித பண்டார கூறுகையில்,

“SHARK அணியின் அதிசிறந்த பெறுபேறுகள் மற்றும் தமது கன்னிப் போட்டியிலேயே மெச்சத்தக்க பந்தயக் காரை வடிவமைத்தமை ஆகியன, இலங்கையிலுள்ள பொறியியல் திறமைகளை ஏனைய நாடுகள் கவனத்தில் எடுப்பதற்கும் அது தொடர்பில் சிந்திப்பதற்கும் நிச்சயமாக வழிவகுத்துள்ளன. 

இலங்கையில் திறமைசாலிகளை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான வளங்களை வழங்கி சர்வதேச நிகழ்வொன்றில் தாய்நாட்டிற்கு பெருமை தேடித்தருவதற்கு அவர்களுக்கு இடமளிப்பதில் எமது நோக்கத்தை நாம் நிச்சயமாக அடையப் பெற்றுள்ளோம்.”

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடாதிபதியான பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில்,

“மொரட்டுவை பல்கலைக்கழகம் எமது நாட்டில் பொறியியல் கல்வியின் சிகரமாக எப்போதும் திகழ்ந்து வந்துள்ளதுடன் எமது பட்டதாரி மாணவர்கள் உலகுடன் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளனர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

இயந்திரவியல் பொறியியல் பிரிவின் SHARK அணியானது, எமது பேரபிமானத்திற்குரிய கல்வி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு முறை பெருமை சேர்ப்பித்துள்ளதுடன் முதன்முறையாக கலந்துகொண்ட Formula Student UK போட்டியில் மூன்று விருதுகளை வென்றுள்ளதன் மூலமாக எமது நாட்டிற்கு வெற்றியையும் பெருமையையும் சேர்ப்பித்துள்ளது. 

எதிர்வரும் காலங்களில் Formula Student அரங்கில் அவர்கள் இன்னும் பல வியப்புக்களை நிகழ்த்துவர் என நான் நிச்சயமாக நம்புகின்றேன். இச்செயற்திட்டத்தின் ஏக அனுசரணையாளராக DIMO நிறுவனம் வழங்கியுள்ள மகத்தான ஆதரவிற்காக நான் நன்றிக்கடன்பட்டுள்ளதுடன் அந்நிறுவனம் வழங்கிய நிதியியல் மற்றும் தொழில்நுட்பரீதியான பேராதரவு மோட்டார் பந்தய சமூகத்தில் உள்ள விற்பன்னர்கள் மத்தியில் எமது நாட்டின் முத்திரையையும் பொறிக்கும் வாய்ப்பினை இந்த மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.”

SHARK அணியின் அணித் தலைவரான  ஹர்ஷன கலஷா கூறுகையில்,

“ஒரு நாடு மற்றும் ஒரு பல்கலைக்கழகம் என்ற வகையில் Formula Student UK  போட்டியில் பங்குபற்றிய முதற்தடவையிலேயே மூன்று விருதுகளை சம்பாதித்துள்ளமை மிகுந்த கௌரவத்தையும் பெருமையையும் அளித்துள்ளது. 

எமது சிரேஷ்ட அணிகள் இச்செயற்திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகளில் தோல்விகளைச் சந்தித்திருந்த போதிலும், மொரட்டுவை பல்கலைக்கழத்தின் இயந்திரவியல் பொறியியல் பீடத்தைச் சார்ந்த எமது அணி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு, தீவிர உணர்வு மற்றும் தொழில்நுட்ப திறமை ஆகியன அடிச்சட்டத்தை வடிவமைத்து, உருவாக்குவதற்கு தேவையான நிதியுதவிகள் மற்றும் நன்கொடைகளை பகுதியளவில் திரட்டும் முயற்சியில் வெற்றி கண்டது. 

போதிய நிதியின்மை காரணமாக இச்செயற்திட்டத்தை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுப்பது என்பது தொடர்பில் நாம் இக்கட்டான நிலைமையில் இருந்த சமயத்தில் ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றைக் கண்ணுற்ற DIMO நிறுவனத்தின் பணிப்பாளரான  விஜித பண்டார எம்மைத் தொடர்பு கொண்டார். 

அவர்களின் நிதியியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவின் மூலமாக SHARK அணி மீண்டும் உதயமாகியது. இக்காரை தரைமட்டத்திலிருந்து வடிவமைப்புச் செய்வதற்கு எமது அணியால் முடிந்துள்ளதுடன் உலகெங்கிலும் அணிகள் மற்றும் நடுவர்களால் எமது தொழில்நுட்ப திறமைக்கு வெகுவான பாராட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எதிர்வரும் காலங்களிலும் எமது பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.”

SHARK அணி உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

ஹர்ஷன கலஷா (அணித் தலைவர்), ரஜீவ் விசிதகம (தொழில்நுட்ப பணிப்பாளர்), சத்துர சேமசிங்க (தொழிற்பாட்டு முகாமையாளர்), சஜித் எதிரிசிங்க (நிதி முகாமையாளர்), நுஷென் செனவிரட்ண (பிரதம பொறியியலாளர் - அடிச்சட்டம்), சச்சித்ரா அத்தபத்து பிரதம பொறியியலாளர் - அடிச்சட்டம்), ருக்மல் தனுஷ்க (பிரதம பொறியியலாளர் - Power Train),  பிரணீத் வீரதுங்க (பிரதம பொறியியலாளர் - Steering), இசுறு முதலிகே (பிரதம பொறியியலாளர் - Vehicle Dynamics), இந்துவர முனசிங்க (பிரதம பொறியியலாளர் - மின்னியல்), அமித் மதுகமுவ ( சந்தைப்படுத்தல் பணிப்பாளர்), புத்தி ஹேரத் (நிகழ்வு இணைப்பாளர்), துஷார சந்தகெலும் (உதவி பொறியியலாளர் - Power Train), கசுன் ஹர்ஷன (உதவி பொறியியலாளர் - Power Train), ஷமீன் கம்புருகமுவ (உதவி பொறியியலாளர் - அடிச்சட்டம்), நவோத லக்ஷான் (உதவி பொறியியலாளர் - Brakes and Dynamics),  ஜாலிய சிந்தக (உதவி பொறியியலாளர் - Suspension), புத்திக டி அல்விஸ் (உதவி பொறியியலாளர் - Steering).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58
news-image

அரசியல்வாதியாக அவதாரமெடுக்கின்றார் ஷாகிப் அல் ஹசன்

2023-11-27 14:38:26
news-image

இளையோர் உலக குத்துச் சண்டையில் களமிறங்கும்...

2023-11-25 14:16:41
news-image

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

2023-11-25 12:16:36
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்”...

2023-11-25 12:04:52
news-image

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை...

2023-11-24 17:48:33
news-image

தனுஸ்க விவகாரம் - அவுஸ்திரேலிய பொலிஸார்...

2023-11-24 12:20:51
news-image

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விரர்...

2023-11-23 13:18:49
news-image

இரத்தம் சொட்டச்சொட்ட ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது...

2023-11-22 20:14:15
news-image

சுவிற்ஸர்லாந்தில் JKI கராத்தே சுற்றுப்போட்டி 2023...

2023-11-22 11:51:42