கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைது

Published By: Digital Desk 4

20 Nov, 2020 | 01:19 PM
image

கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய  மூவர் மதவாச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து நேற்று (19.11) அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டு போலி நாணயதாள்கள் 200, நாணயம் அச்சிடும் இயந்திரம், 100 டொலர் பெறுமதியான அமெரிக்க நாணயதாள்கள் மூன்று மற்றும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவரிடமிருந்து வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்பட்ட ஏழு மருத்துவர்களின் றப்பர் முத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசி மருந்துகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தனர். 

கள்ளநோட்டுக்களை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் கொடுத்து அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு முயற்சித்த வேளையிலே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19