பொலிஸ் பரீட்சைக்கு தோற்றவிருந்த யுவதியின் வீட்டில் மதுபானத்தை மறைத்து வைத்த நபர் கைது

Published By: Digital Desk 4

20 Nov, 2020 | 12:50 PM
image

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கான நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவிருந்த யுவதியை தடுக்குமுகமாக குறித்த யுவதியின் வீட்டின் பின்புறத்தில் கசிப்பு, மதுபானம் நிரப்பப்பட்ட இரு கேன்களை மறைத்து வைத்த நபரை கராண்டுகலைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பகுதியின் கராண்டுகலை என்ற இடத்திலேயே இன்று 20-11-2020 மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்குl;படுத்தப்பட்ட போது, குறிப்பிட்ட யுவதி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றினால் தொழில் கிடைத்து விடும்.

அதனைத் தடுக்கு முகமாகவே கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை யுவதியின் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்தமையை குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட யுவதி பொலிஸ் கான்ஸ்டபிளாக தொழில் கிடைத்து விட்டால் நம்மால் வாழ முடியாமல் போய்விடுமென்ற அச்சத்தினாலே தான் மேற்படி செயற்பாட்டினை மேற்கொண்டேன்.

யுவதியின் வீட்டின் பின்புறம் கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை மறைத்து வைத்ததோடு யுவதியே கசிப்பு தயாரித்து விற்பனை செய்வதாக தகவலையும் பொலிசாருக்கு வழங்கினேனென்று கைது செய்யப்பட்ட நபர் பொலிசாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை சுற்றி வலைத்த கராண்டுகலைப் பொலிசார் அங்கு மேற்கொண்ட சோதனையின் போது மேலும் கசிப்பு நிரப்பப்பட்ட மூன்று கேன்களை கண்டுப் பிடித்து மீட்டனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த யுவதியின் வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை மீட்டதுடன் குறித்த யுவதியையும் கைது செய்தனர்.

ஆனால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது யுவதியின் அயல் வீட்டைச் சேர்ந்தவரும் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நபரை கைது செய்து விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது அந்த நபர் திட்டமிட்டு இச் செயலைப் புரிந்தமை தெரியவந்துள்ளது. 

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட யுவதி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் யுவதிக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியமை, கசிப்பு தயாரித்தமை, விற்பனை செய்தமை, ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை கராண்டுகலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50