பேலியகொடவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மெனிங் சந்தை பிரதமரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவின் கீழ் பொது மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய மெனிங் சந்தையில் 1,192 வர்த்தக நிலையங்களும் , விசாலமான வாகன தரிப்பிடமும், ஊழியர்களுக்கான ஓய்வறைகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், உணவகங்கள், குளிர் அறைகள் மற்றும் ஹோட்டல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

வாகன தரப்பிடமானது சுமார் 600 வாகனங்களை நிறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு மாடி கொண்ட மெனிங் சந்தையின் மூன்றாவது மாடி வரை வாகனங்களை கொண்டு செல்லுக் கூடிய வகையல் வாளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் வரையறுக்கப்பட்டிருந்த மெனிங் சந்தையானது தற்போது பேலியகொடவில் 13.5 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்மாணத்திற்கான மொத்த செலவு 6.9 பில்லியன் ரூபா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.