அரச மருந்தக கூட்டுத்தாபனத்தில் மோசடி  : அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை

Published By: R. Kalaichelvan

20 Nov, 2020 | 01:05 PM
image

(நா.தனுஜா)

உள்நாட்டு உற்பத்தி என்ற போர்வையில் அரச மருந்தக உற்பத்திக் கூட்டுத்தாபனத்தில் பெருமளவான ஊழல் இடம்பெற்றுவருகின்றது. கடந்த காலத்தில் அரச மருந்தக உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியவர் பெருமளவான ஊழல்களில் ஈடுபட்டிருந்தார்.

எனினும் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் முன்னாள் தலைவரின் நெருங்கிய உறவினராவார். இவர்கள் இருவரும் இணைந்து மருந்தக உற்பத்திகளின் ஊடாக குறித்தளவில் சட்டவிரோத வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் ருக்ஷான் பெல்லன குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியினளவு குறைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.

அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கென அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத்திட்டத்தில் சுகாதாரத்துறைக்கென ஒப்பீட்டளவில் குறைந்தளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை பெரிதும் விசனமளிக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும், அதற்கு முன்னைய வருடத்தை விடவும் அதிகளவான நிதியே சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும். அவ்வாறிருக்கையில் இம்முறை சுகாதாரத்துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளமை முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

அரசசெலவினங்களைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுதொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருந்துப்பொருட்களின் அளவு குறைக்கப்படவிருக்கிறதா? அல்லது மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதியினளவு குறைக்கப்படவிருக்கிறதா? அல்லது சுகாதாரத்துறையில் இடம்பெறும் ஊழல்களைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம் செலவுகள் குறைக்கப்படவிருக்கிறதா? என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் அவர் இதன்போது தெரிவத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33