பண்டாரவளையில் மலசலகூடக் குழியொன்றிலிருந்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் அக் குழியிலிருந்து வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையினால் திடீர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பண்டாரவளைப் பகுதியின் ரம்பராவை என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

ரம்பராவையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 46 வயதான டபள்யு. பி. விஜயகோன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் நோய்வாய்ப்பட்ட குறித்த நபர் உடனடியாக தியத்தலாவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தற்போது குறித்த நபரின் சடலம், சட்டவைத்திய பரிசோதனைக்காக தியத்தலாவை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.