நடிகர் விதார்த், நடிகை ரம்யா நம்பீசன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் 'என்றாவது ஒருநாள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'என்றாவது ஒருநாள்'. இப்படத்தில் நடிகர் விதார்த், நடிகை ரம்யா நம்பீசன், கதையின் நாயகன் மற்றும் நாயகியாக நடிக்க, இவர்களுடன் 'சேதுபதி' பட புகழ் குழந்தை நட்சத்திரம் ராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார்.

தமிழக கிராம பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலை தங்களின் வாழ்வாதாரமாக மேற்கொண்டிருக்கும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எதார்த்தமான திரை காவியமாக உருவாகியிருக்கும் 'என்றாவது ஒருநாள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முத்திரை பதித்த முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டிருக்கிறார். 

ஃபர்ஸ்ட் லுக்கில் கொங்கு மண்ணின் மணம் மணப்பதாக கூறி இணையவாசிகள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.