(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுபீட்சத்தின் எதிர்கால நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் விமான நிலைய விமான போக்குவரத்து (ஸ்ரீலங்கா) தனியார் நிறுவனம் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவின் பங்கேற்புடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
விமான நிலையத்தின் 2 ஆம் கட்ட பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்து செல்வதை பல்வேறு காரணங்களை முன்வைத்து தாமதப்படுத்தியது.
அதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் தடைப்பட்டது. எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இதன் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை துரிதப்படுத்துவதாக சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதை உறுதிபடுத்தும் வகையிலாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஓராண்டு கால பதவி பூர்த்தியை முன்னிட்டும் இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், விமான நிலையத்தை பயன்படுத்தும் ஏனைய பயணிகளை ஊக்குவிப்பிற்கும் தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் சர்வதேச விமான சேவை தொடர்புகளின் போது நட்பான சூழலை ஏற்படுத்தி ஒரு நிலையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM