மறைந்த மகாநாயக்க தேரர் நாபான பிரேமசிறி தேரரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இறுதிக் கிரியை தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(22.11.2020) கண்டி - குண்டசாலை - பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபான பிரேமசிறி தேரர் , பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமது 98வது வயதில் நேற்று முன்தினம் காலமாகியிருந்தமை குறிப்பிடதக்கது.