(நா.தனுஜா)

வெளிநாட்டு குடியுரிமையுடைய இந்தியர்களுக்கான அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான இறுதித் திகதி எதிர்வரும் 2021 ஜுன் 30 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

Indian High Commission calls for student applications for 2020-21  Self-Financing Scheme - The Morning - Sri Lanka News

வெளிநாட்டு குடியுரிமையுடைய இந்தியர்களுக்கான அட்டை என்பது வெளிநாடுகளில் குடியுரிமையைக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

இதனைப் பயன்படுத்தி இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட வெளிநாடுகளில் வாழும் பிரஜைகள் இந்தியாவில் வசிக்கவும் தொழில்புரியவும் முடியும். எனினும் அதனைப் பயன்படுத்தி இந்தியத்தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.

அந்த அட்டையைப் புதுப்பித்துப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எதிர்வரும் 2021 ஜுன் 30 ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் அறிவித்திருக்கிறது.

இது குறித்த சட்டதிட்டங்களின் படி 20 வயதிற்குக் குறைந்தவர்களும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் முகத்தோற்றத்தில் மாறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவர்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் போது மேற்படி அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.