(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வருபவர்களில் ஐந்து சதவீதமானவர்களே இவ்வாறு முறையற்று செயற்பட்டு வருவதாகவும் , அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது :
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களை தொடர்ந்தும் வீடுகளிலேயே இருக்குமாறும் கூறுகின்றோம்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய பொது மக்கள் செயற்பட்டாலே முடக்கப்பட்டுள்ள பகுதிகளை வழமைக்கு கொண்டுவரமுடியும்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறுவோரை அடையாளம் காணுவதற்காக ட்ரோன் கெமராக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய நேற்று முன்தினம் மாத்திரம் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசித்துவரும் நபர்களில் 95 சதவீதமானவர்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய செயற்பட்டு வருவதுடன், எஞ்சிய 5 சதவீதமானவர்களே அதற்கு புறம்பாக செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு முறைக்கேடாக செயற்படும் நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் ட்ரோன் கமராக்கள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மூடப்பட்டிருந்த அலுவலங்கள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் , சமூக இடைவெளி பேணுவதையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் குறித்த நிறுவனங்களுக்கு சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக வருகைத்தரும் நபர்கள் தொடர்பான தகவல்களை பதிவுச் செய்துக்கொள்ளுமாறும், நிறுவன ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்கு வருகைத்தரும் அனைவருமே தங்களது கைகளை சுத்தம் செய்துக் கொள்வதற்கான வசதிகளை செய்துக் கொடுக்குமாறும் நாம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தோம்.
அதற்கமைய அந்த நிறுவனங்களும் உரிய வசிகளை செய்து கொடுத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வுபிரிவினர் தெரிவித்தனர்.எனினும் இவ்வாறு ஒரு நிறுவனத்திலோ அல்லது அலுவலகம் ஒன்றில் நீங்கள் உங்களது விபரங்களை எழுதும் போது உண்மை விபரங்களை மாத்திரம் எழுதுவதுடன், எப்போதும் அதற்கான பேனையை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்.
பிரிதொருவரின் பேனையை பயன்படுத்தும் போது அதில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதன் போது பொது வாகனங்களை பயன்படுத்தும் நபர்களும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பேணுவதும் கட்டாயம் பின்பற்றுவதுடன், இந்த பொது வாகனங்களில் பயணிக்கும் போது இருக்கைகள் அல்லது கைப்படிகளை பிடித்தால் உடனே கைகளை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பில் நேற்று முன்தினம் மாத்திரம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே நீர்கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 312 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM