மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடடில் ஒக்டோபர் 4 ஆம் திகதி கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத் தொடங்கியதன் காரணமாக மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகளை திட்டமிட்டவாறு நவம்பர் 09 ஆம் திகதி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந் நிலையில் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கல்வி அமைச்சு சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கோரியிருந்தது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் நவம்பர் 18 ஆம் திகதி எடுக்கப்பட்ட நிலையில், அது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் தரம் 06 - 13 ஆம் வகுப்புளுக்காக மீண்டும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும்.

அதேநேரம் தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை தொடர்பிலும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை.